அரசியல் ஆத்திசூடி | நட்பு - தமிழ் சமூகத்தின் இணையமுகம்


அரசியல் ஆத்திசூடி

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/10/2011
கருத்துகள் (1) 370 views
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (12 votes, average: 5.00 out of 5)
Loading ... Loading ...

1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்!

2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!

3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர்.

4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்!

5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர்

6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்!

7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்

8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்!

9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்!

10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்!

11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்!

12. ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்!

13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்!

14. கயவருக்கு வாக்களிக்காதீர்!

15. காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்!

16. கிடைத்ததை எல்லாம் சுருட்டுபவருக்கு வாக்களிக்காதீர்!

17. கீழான செயல் புரிவோருக்கு வாக்களிக்காதீர்!

18. குற்ற மனம் கொண்டவருக்கு வாக்களிக்காதீர்!

19. கூட்டுக் கொள்ளையருக்கு வாக்களிக்காதீர்!

20. கெடுமதி படைத்தோருக்கு வாக்களிக்காதீர்!

21. கேடு கெட்டன செய்வோருக்கு வாக்களிக்காதீர் !

22. கைச் சின்னத்திற்கு வாக்களிக்காதீர் !

23. கொடுங்கோலருக்கு வாக்களிக்காதீர் !

24. கோழைக்கு வாக்களிக்காதீர் !

25. கௌவை (துன்பம்) தருபவருக்கு வாக்களிக்காதீர் !

26. ‘ங’ போல் வளையாதவருக்கு வாக்களிக்காதீர் !

27. சட்டத்தை மதியாதவருக்கு வாக்களிக்காதீர் !

28. சாதி வெறியருக்கு வாக்களிக்காதீர் !

29. சிங்களக் கொடுமைக்குத் துணைபுரிபவருக்கு வாக்களிக்காதீர் !

30. சீறவேண்டிய பொழுது சீறாதவருக்கு வாக்களிக்காதீர் !

31. சுரண்டி வாழ்பவருக்கு வாக்களிக்காதீர்!

32. சூதருக்கு வாக்களிக்காதீர்!

33. செய்ய வேண்டுவன செய்யாதவருக்கு வாக்களிக்காதீர் !

34. சேர்ந்தாரைக் கொல்லுபவருக்கு வாக்களிக்காதீர்!

35. ‘சை’ என இகழ வேண்டியவருக்கு வாக்களிக்காதீர் !

36. சொல்தவறுவோர்க்கு வாக்களிக்காதீர்!

37. சோம்பேறிகளுக்கு வாக்களிக்காதீர் !

38. ஞமலி (நாய்) போல் தன்னினத்தையே எதிர்ப்பவருக்கு வாக்களிக்காதீர்!
39. ஞாட்பு (போர்க்களம் ) எனச் சொல்லிக் கொலைக் களம் ஆக்கியவருக்கு வாக்களிக்காதீர்!
40. ஞிமிறு (தேனீ) போல் சுறுசுறுப்பாக இயங்காதவருக்கு வாக்களிக்காதீர்!

41. ஞெகிழும் (மனம் இளகும்) இயல்புஅற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

42. ஞேயம் (அன்பு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!

43. ஞொள்ளும் (அஞ்சும்) இயல்பினருக்கு வாக்களிக்காதீர்!

44. தமிழ்ப்பகைவருக்கு வாக்களிக்காதீர் !

45. தாய்த்தமிழைப் பழிப்பவருக்கு வாக்களிக்காதீர் !

46. திருக்குறள் நெறி போற்றாதவருக்கு வாக்களிக்காதீர் !

47. தீந்தமிழை உயர்த்தாதவருக்கு வாக்களிக்காதீர் !

48. துன்பம் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !

49. தூய தமிழைப் பேணாதவருக்கு வாக்களிக்காதீர் !

50.தெளிவில்லாதவருக்கு வாக்களிக்காதீர் !

51. தேவையைப் பெருக்கிக் கொள்பவருக்கு வாக்களிக்காதீர் !

52. தையலுக்கு (பெண்களுக்கு) இணை உரிமை அளிக்காதவருக்கு வாக்களிக்காதீர் !

53. தொன்மைத்தமிழைச் சிதைப்பவருக்கு வாக்களிக்காதீர் !

54. தோள்கொடுத்து உதவாதவருக்கு வாக்களிக்காதீர் !

55. தௌவையைப் (வறுமையை)ப் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !

56. நற்றமிழில் பேசாதவருக்கு வாக்களிக்காதீர் !

57. நாணயம் தவறுபவருக்கு வாக்களிக்காதீர் !

58. நிதியைச் சுருட்டுவோருக்கு வாக்களிக்காதீர் !

59. நீதி தவறுவோருக்கு வாக்களிக்காதீர் !

60. நுகர் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அறியாதவருக்கு வாக்களிக்காதீர் !

61. நூக்கம் (ஊசலாட்டம்) உள்ளவர்க்கு வாக்களிக்காதீர்!

62. நெஞ்சாரம் (மனத்துணிவு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!

63. நேர்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

64. நைச்சியம் பண்ணுவோர்க்கு வாக்களிக்காதீர்!

65. நொய்ம்மையாளருக்கு (மனத்திடம் இல்லாதவர்க்கு) வாக்களிக்காதீர்!

66. நோகச் செய்வோருக்கு வாக்களிக்காதீர்!

67. பகுத்தறிவு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

68. பாடுபடாதவருக்கு வாக்களிக்காதீர்!

69. பிறன்மனை நோக்குபவர்க்கு வாக்களிக்காதீர்!

70. பீடு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

71. புலனெறி அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

72. பூச்சாளருக்கு (வெளிப்பகட்டாளருக்கு) வாக்களிக்காதீர்!

73. பெரியாரைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!

74. பேராசையாளர்க்கு வாக்களிக்காதீர்!

75. பையச் செயல்படுநர்க்கு வாக்களிக்காதீர்!

76. பொதுமையை மறுப்பவர்க்கு வாக்களிக்காதீர்!

77. போக்கிலிகளுக்கு வாக்களிக்காதீர்!

78. மக்கள்நேயம் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

79. மாண்பற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

80. மிண்டுநர்க்கு (மதத்தால் பிழைப்பவர்க்கு) வாக்களிக்காதீர்!

81. மீச்செலவு (அடங்காச் செலவு) செய்யுநர்க்கு வாக்களிக்காதீர்!

82. முரடர்க்கு வாக்களிக்காதீர்!

83. மூடர்க்கு வாக்களிக்காதீர்!

84. மென்சொல் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

85. மேன்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

86. மையலில் திரிபவர்க்கு வாக்களிக்காதீர்!

87. மொழிக்கொலைஞர்க்கு வாக்களிக்காதீர்!

88. மோசடியாளர்க்கு வாக்களிக்காதீர்!

89. யாகம் செய்பவர்க்கு வாக்களிக்காதீர்!

90. வஞ்சகர்க்கு வாக்களிக்காதீர்!

91. வாய்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

92. விலைக்குக் கேட்பவர்க்கு வாக்களிக்காதீர்!

93. வீறு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!

94. வெய்யனுக்கு(க் கொடியவனுக்கு) வாக்களிக்காதீர்!

95. வேடதாரிகளுக்கு வாக்களிக்காதீர்!

96. வையகம் சுரண்டுநர்க்கு வாக்களிக்காதீர்!

97. அன்னைத் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!

98 ஆரா அருந்தமிழை வளர்ப்பவர்க்கு வாக்களிப்பீர்!

99. இன்றமிழை இயம்புநர்க்கு வாக்களிப்பீர்!

100. ஈடில்லாத் தமிழை எழுதுநர்க்கு வாக்களிப்பீர்!

101. உயர்வளத்தமிழை உரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!

102. ஊடகத்தில் தமிழைக் காப்பவர்க்கு வாக்களிப்பீர்!

103. என்றும் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!.

104. ஏழிசைத் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!

105. ஐந்திரத் தமிழை அணிசெய்வோர்க்கு வாக்களிப்பீர்!

106. ஒண்டமிழை முன்னேற்றுவோர்க்கு வாக்களிப்பீர்!

107. ஓங்கல் தமிழை ஓதுவோர்க்கு வாக்களிப்பீர்!

108. ஔவைத் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!

109. கன்னித்தமிழைப் படிப்பவர்க்கு வாக்களிப்பீர்!

110. காவியத் தமிழைச் செழிப்பாக்குநர்க்கு வாக்களிப்பீர்!

111. கிளைமிகு தமிழைக் கிளப்பவர்க்கு வாக்களிப்பீர்! (கிளப்பவர் – எழுச்சியுடன் உரைப்பவர்)

112. கீழ்க்கணக்குத் தமிழை வழங்குநர்க்கு வாக்களிப்பீர்!

113. குன்றாத் தமிழைக் குயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்! (குயிற்றுநர் – மனத்தில் பதியும்படிச் சொல்லுபவர்)

114. கூத்துத் தமிழை அளிப்பவர்க்கு வாக்களிப்பீர்!

115. கெடுதி அறியாத் தமிழை விளம்புநர்க்கு வாக்களிப்பீர்!

116. கேடிலித் தமிழைப் பகறுவோர்க்கு வாக்களிப்பீர்!

117. கைவளத் தமிழைக் கட்டுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!

118. கொற்றவர் தமிழைச் சொற்றுநர்க்கு வாக்களிப்பீர்!

119. கோலோச்சும் தமிழை ஓயாதுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!

120. சங்கத் தமிழைச் செப்புநர்க்கு வாக்களிப்பீர்!

121. சான்றோர் தமிழைச் சாற்றுநர்க்கு வாக்களிப்பீர்!

122. சிறந்த தமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!

123. சீர்மிகுந்த தமிழைப் பரவுநர்க்கு வாக்களிப்பீர்! (பரவுநர் – துதிப்பவர்)

124. சுடரொளித் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!

125. சூரியத் தமிழைச் சூழவைப்பவர்க்கு வாக்களிப்பீர்!

126. செந்தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!

127. சேமத் தமிழைச் செவியறிவுறுத்துநர்க்கு வாக்களிப்பீர்!

128. சொல்லார் தமிழைச் சொல்லுநர்க்கு வாக்களிப்பீர்!

129. சோர்வறு தமிழை நலமாக்குநர்க்கு வாக்களிப்பீர்!

130. ஞாலத்தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்

131. தண்டமிழைத் தழைக்கச்செய்யுநருக்கு வாக்களிப்பீர்!

132. தாய்த்தமிழைத் தருநர்க்கு வாக்களிப்பீர்!

133. திருநெறிய தமிழைத் திரட்டுநர்க்கு வாக்களிப்பீர்!

134. தீந்தமிழைத் துதிப்பவர்க்கு வாக்களிப்பீர்!

135. துய்ய தமிழைத் துளங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!

136. தூய தமிழைத் துலங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!

137. தெய்வத்தமிழைத் துதிப்போர்க்கு வாக்களிப்பீர்!

138. தேனேரார் தமிழை ஒளிரச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!

139. தொல்காப்பியத் தமிழை ஒல்காப்புகழ்ஆக்குநர்க்கு வாக்களிப்பீர்!

140. தோலா (ஈடழியா)த் தமிழை நிலைக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!

141. நற்றமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!

142. நானிலத் தமிழை நாடுநர்க்கு வாக்களிப்பீர்!

143. நிகரில்லன தமிழை முன்னேற்றுநர்க்கு வாக்களிப்பீர்!

144. நீடுபுகழ்த் தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!

145. நுட்பத் தமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!

146. நூல் நிறை தமிழை நுவலுநர்க்கு வாக்களிப்பீர்!

147. நெறியாளர் தமிழைப் பாராட்டுநர்க்கு வாக்களிப்பீர்!

148. நேயத் தமிழைத் துய்ப்போர்க்கு வாக்களிப்பீர்!

149. பரவிய தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!

150. பாரினார் தமிழைப் பாதுகாப்பவர்க்கு வாக்களிப்பீர்!

151. புகழ் நின்ற தமிழைப் புகழ்நர்க்கு வாக்களிப்பீர்!

152. பூந்தமிழைப் புகலுநர்க்கு வாக்களிப்பீர்!

153. பெருமிதத் தமிழை எய்வோருக்கு வாக்களிப்பீர்!

154. பேரின்பத் தமிழைச் சேர்ந்திசைப்போர்க்கு வாக்களிப்பீர்!

155. பைந்தமிழைப் பாடுநர்க்கு வாக்களிப்பீர்!

156. பொய்யாத்தமிழைப் படிக்குநர்க்கு வாக்களிப்பீர்!

157. போற்றித் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!

158. மருவிய தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!

159. மாண்புறு தமிழை மலரச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!

160. மிக்கிளமைத் தமிழை மிழற்றுநர்க்கு வாக்களிப்பீர்!

161. மீக்கூர் (மேம்படும்)தமிழை மேம்படுத்துநர்க்கு வாக்களிப்பீர்!

162. முத்தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!

163. மூவாத் தமிழைப் பயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்!

164. மேற்கணக்குத் தமிழை ஆய்வோர்க்கு வாக்களிப்பீர்!

165. வண்டமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!

166. வாடாத் தமிழை வாசிப்பவர்க்கு வாக்களிப்பீர்!

167. வினைநலத் தமிழை வியப்பவர்க்கு வாக்களிப்பீர்!

168. வீறார் தமிழை விரும்புநர்க்கு வாக்களிப்பீர்!

169. வெற்றித்தமிழைப் பூரிக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!

170. வேந்தர் தமிழை ஏந்துநர்க்கு வாக்களிப்பீர்!

171. வையத் தமிழை வணங்குநர்க்கு வாக்களிப்பீர்!

நன்றி மீனகம் (meenakam.com)


வாசகர் கருத்துகள் (1)
  1. இதன்படி யாருக்கும் வாக்களிக்க முடியாது. ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் பார்த்தால் ம.தி.மு.க.விற்கு வாக்களிக்கலாம். தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கும் வாக்களிக்கலாம். இனியேனும் அரசியல்வாதிகள் இதன்படி நடக்க வேண்டும் என நாம் கட்டாயப்படுத்த வேண்டும்.


உங்கள் கருத்தை பதிவு செய்ய :

   

   

   

Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil)


நட்பூ - தமிழ் சமூகத்தின் இணையமுகம்


 தேடுக
    தேடுக :
காணொளி
கொலைவெறி ஏன்?
கொலைவெறிக்கெதிரான தமிழ்ப் பாடல்
நட்பு – திரை
natpu
அதிகம் படித்தவை
சமீபத்திய கருத்துகள்
தேசிய இனங்களின் கூட்டாட்சி: சங்கரன்கோவில் இடைத் தேர்தலை விட மிக முக்கியமானது, வரக்கூ�...
தேசிய இனங்களின் கூட்டாட்சி: சங்கரன்கோவில் இடைத் தேர்தலை விட மிக முக்கியமானது, வரக்கூ�...
Anand Natarajan: Naillathe nadakatum...
உங்கள் பெயர்: அன்புடையீர் வணக்கம் 'நட்பு ' இணையதளத்தில் கம்பன் பொங்க�...
ganeshkumar: sdfsfsfsdf...
gayathri: சூப்பர்.இது நல்ல பாட்டு.இது தமிழ் கொல வெறியார் கள்ளுக்கு �...
அம்மு: நன்று, இவள் போட்டோசாப் தெரிந்தவள் மட்டும் அல்ல நல்ல படைப்...
sasikala: பயனுள்ள தகவல்...
குமரன்: வரும் ஞாயிறு என ௫.௨.௨௦௧௨ (5.2.12) தாய் மண்ணின் சாமிகள் காட்டப் ப�...
kumaran: விளையாட்டும் அருமை அதன் பெயரும் அருமை...
arun: தி.மு.க வும் திகாரும் தொடரும் திருப்பங்கள் ........
அருண்: கடமை இது பணத்தின் காட்சி செயல், கட்டுப்பாடு இது பணத்தின்...
உங்கள் பெயர்: இது தண்டிக்கப் பட வேண்டிய விஷயம்.........அவையும் நம்மைப் போல் �...
sambath: ஒய் திஸ் கொலை வெறி டா.......
n puspha: this is very bad photos. nee oru madayanada mathavanga unarchiya pooriyathavana poda veli illathavane....

வேலை தேவையா?

噴畫| banner| banner 價錢| Backdrop| Backdrop 價錢| 易拉架| 易拉架 價錢| 橫額| 印刷| 橫額印刷| 印刷 報價| 貼紙| 貼紙印刷| 宣傳單張| 宣傳單張印刷| 展覽攤位| 書刊 印刷| Bannershop| Ebanner| Eprint| 印刷公司| 海報| 攤位| pvc板| 易拉架設計| 海報印刷| 展板| 禮封| 易拉架尺寸| foamboard| hk print| hong kong printing| Printing| Digital Printing|| 喜帖| 過膠| 信封 數碼印刷| backdrop| print100| 咭片皇| 印館

邮件营销| Email Marketing| 電郵推廣| edm营销| 邮件群发软件| edm| 营销软件| Mailchimp| Hubspot| Sendinblue| ActiveCampaign| SMS

QR code scanner| inventory management system| labelling| Kiosk| warehouse management|

DecorCollection歐洲傢俬| 傢俬/家俬/家私| 意大利傢俬/實木傢俬| 梳化| 意大利梳化/歐洲梳化| 餐桌/餐枱/餐檯| 餐椅| 電視櫃| 衣櫃| 床架| 茶几

地產代理/物業投資| 租辦公室/租寫字樓| 地產新聞| 甲級寫字樓/頂手| Grade A Office| Commercial Building / Office building| Hong Kong Office Rental| Rent Office| Office for lease / office leasing| Office for sale| Office relocation

香港甲級寫字樓出租

中環中心| 合和中心| 新文華中心| 力寶中心| 禮頓中心| Jardine House| Admiralty Centre| 港威大廈| One Island East| 創紀之城| 太子大廈| 怡和大廈| 康宏廣場| 萬宜大廈| 胡忠大廈| 信德中心| 北京道1號| One Kowloon| The Center| World Wide House

Wycombe Abbey| 香港威雅學校| 國際小學| 英國學校| International schools hong kong| 香港國際學校|香港威雅國際學校| Wycombe Abbey School

Addmotor Electric Bike| Electric bike shop / electric bicycle shop| Electric bike review| Electric trike| Fat tire electric bike| Best electric bike| Electric bicycle| E bike| Electric bikes for sale| Folding electric bike| Electric mountain bike| Electric tricycle| Mid drive electric bike Juiced Bikes Pedego Rad-Power